Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீ லங்கா இராணுவத்தின் சிங்க படையணியின் 'கோகர' என்ற சிங்கம் மரணம்

ஸ்ரீ லங்கா இராணுவத்தின் சிங்க படையணியில் இருந்த 'கோகர'; என்ற பெயரைக்கொண்ட சிங்கம் கடந்த 11 ஆம் திகதி மரணமடைந்துள்ளது என்று இராணுவத்தின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
சிங்கப்படையணியின் கோரிக்கைக்கு அமைவாக இந்த சிங்கம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் கடந்த 1996ஆம் ஆண்டு அப்படையணிக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
கோகரின் இறுதி கிரியை, அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க படையணி முகாமில் நேற்று நடைபெற்றது. 
1996ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் திகதி பிறந்த கோகர், சிங்க படையணிக்கு அதேயாண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி கையளிக்கப்பட்டது. 
ஆபிரிக்க இனத்தைச்சேர்ந்த இந்த சிங்கம், இறக்கும் போது இரண்டரையடி உயரமும் 5 அடி நீளமும் கொண்டிருந்தது.
சிங்க படையணியின் இலட்சினை, சிங்கம் என்பதனால் கோகர் அந்த படையணியிக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்திருந்தது. 

Post a Comment

0 Comments