Ticker

6/recent/ticker-posts

ரஜினிகாந்துக்கு மலேசிய டத்தோ விருது?


ரஜினிக்கு மலேசிய அரசின் உயரிய விருதான ‘டத்தோ’ விருது வழங்க வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர்கள் கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள்.

இந்த விருது சமூக சேவையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஹாலிவுட்டில் நடிகர் ஜாக்கிசான், நடிகை மிச்செல்லியோ, இந்தி நடிகர் ஷாருக்கான் போன்றோர் இவ்விருதை பெற்று இருக்கிறார்கள்.

ரஜினிகாந்துக்கும் டத்தோ விருது வழங்க வேண்டும் என்று மலேசியாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் வற்புறுத்தி உள்ளனர். இந்த வருதை பெறுவதற்கு அவர் தகுதியானவராக இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

தமிழ் திரையுலகில் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். அவரது படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் ஏற்பட்டு உள்ளது.

அனைத்து நாடுகளிலும் ரஜினி படங்கள் வெற்றிகரமாக ஓடுகின்றன. ஜப்பானியர்கள் ரஜினிக்கு ரசிகர் மன்றமே துவங்கி இருக்கிறார்கள். ரஜினி படம் ரிலீசாகும் போதெல்லாம் ஜப்பானிய ரசிகர்கள் சென்னை வந்து அவரது படத்தை பார்க்கின்றனர். மலேசியாவிலும் ரஜினிக்கு பெரிய ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.

எனவே அவருக்கு டத்தோ விருது வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ரசிகர்கள் கையெழுத்து இயக்கம் துவங்கியுள்ளனர். விரைவில் இதனை ‘ஆன்லைன்’ மூலம் மலேசிய அரசுக்கு அனுப்பி வைக்க இருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments