Ticker

6/recent/ticker-posts

மூடி மறைக்கப்படும் தமிழினப் படுகொலை! நீதிகேட்டு அணிதிரள்வோம்: சுவிஸ் ஈழத்தமிழரவை

அறுபது வருடங்களுக்கு மேலாக சிறீலங்கா அரசின் கொடிய இனப்படுகொலைக்கு முகம்கொடுத்து, அதற்கெதிராக பல ஒப்பற்ற உயிர்த் தியாகங்கiளை விலையாகக் கொடுத்து போராடிவரும் அடக்கப்பட்ட மக்களாகிய நாம் இன்று அரசியல் ரீதியாக என்றுமில்லாதவாறு ஓர் அனர்த்த நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
கடந்து சென்ற சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலில் தமிழீழ மக்கள் தமது உறவுகளை மிகக் கொடூரமாக இனப்படுகொலை செய்த, தமிழீழத்தை வஞ்சகமாக ஆக்கிரமித்த இனவெறியன் ராஜபக்சவை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கு அவர்களிடமிருந்த கடைசி ஆயுதமான சனநாயக வாக்குரிமையை பிரயோகித்தார்கள்.
அதன் அர்த்தம் மைத்திரிபாலவை எற்றுக்கொள்கிறோம் என்று
பொருட்படாது.
இந்த உண்மை சர்வதேசத்திற்கு சரிவர மொழிபெயர்க்கப்படாமல், தமிழர்கள் சிறிலங்காவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள புதிய அரசின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றும், தமிழர் என்ற அடையாளத்தை கைவிட்டு இலங்கையர்கள் என்ற ஒற்றையாட்சி தத்துவத்துக்குள் தம்மை கலக்க தயாராகவுள்ளதாகவும் சர்வதேசத்திடம் சிறீலங்கா அரசு பொய்யுரைத்து வருகிறது.
ஆட்சி மாறினால் நிர்வாகங்களில் மாற்றங்கள் வருவது பொதுவான விடயம். அப்படி மாற்றப்பட்ட வடமாகாண ஆளுநர் விடயத்தை ஏதோ தனிநாடு கிடைத்துவிட்டது போலவும், தமிழர்களுக்கு உரிமைகள் எல்லாம் கிடைத்துவிட்டது போலவும் மிகைப்படுத்திக் கூறுவதன் மூலம் சர்வதேசத்தின் கண்களை மட்டுமல்ல எமது கண்களையும் நிலைப்பாடுகளையும் கூட தடுமாறவைக்கின்றது.
இவ் வலையில் எமது பல மூத்த தலைவர்களும், மக்களும் அகப்பட்டுக்கொண்டுள்ளமை ஒரு கவலைக்குரிய விடயம்.
அறுபது ஆண்டுகால அனுபவத்தை வைத்தே நாம் இன்றைய அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கவேண்டும். அவ் அனுபவம் என்னவெனில் சிங்களப் பெருந்தேசிய பௌத்த இனவெறி அரசியலுக்கு முன் (அனைத்துச் சிங்களக் கட்சிகளும்) இராஜதந்திரம் என்ற பெயரில் மேற்கொள்ளும் தமிழர் தலைமைகளின் இணக்க அரசியல், தமிழர்களின் எதிர்காலத்தையே முற்றாக அழித்துவிடும் என்பதே ஆகும்.
என சுவிஸ் ஈழத்தமிழரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments