Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானங்கள் தொடர்பான கலந்துரையாடலுக்காக இன்று கூடுகிறது.
இக்கலந்துரையாடலில் புதிய நிர்வாகிகள், அமைப்புகள் நியமிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியலமைப்புகள் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவுள்ளது, இன்று மாலை ஊடக சந்திப்பொன்றும் இடம் பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறப்பு செய்திகள் பலவற்றினை ஊடக சந்திப்பின் மூலம் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகாரிகள் அமைப்பு நேற்று கூடியுள்ளது.

Post a Comment

0 Comments