இந்தியாவின் டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவுபெறுவதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி சட்டசபைக்கு வருகிற 7–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையில் பாரதீய ஜனதா, ஆம் ஆத்மி ,காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனிடையே டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
இதனால் இறுதிகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

0 Comments