இந்தியா, தமிழ்நாட்டில் மூடநம்பிக்கைக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரை புகைப்படம் எடுத்து அவமதித்துவிட்டதாக கோபி காவல் துறையினர் மீது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மாவட்டக் காவல் அலுவலகத்தில், இந்த அமைப்பின் மாவட்டச் செயலர் எம்.ஐ.இர்பான் தலைமையிலான நிர்வாகிகள் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
மூடநம்பிக்கைக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மக்களிடையே மூடநம்பிக்கைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மட்டும்தான் அதில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. எந்த மதத்தையும் புண்படுத்தும் வகையில் வாசகங்கள் இல்லை.
இந்நிலையில், கோபி பகுதியில் அந்த சுவரொட்டிகளை ஒட்டிய எங்கள் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை, குற்றவாளிகளை நடத்துவது போலப் புகைப்படம் எடுத்துள்ளனர். சுவரொட்டிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பறிமுதல் செய்யப்பட்ட சுவரொட்டிகளையும் எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

0 Comments