பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஊரடங்கு சட்டம் பக்தாதில் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு பாக்தாத் மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் சில இடங்களில் கடந்த 10 ஆண்டுகளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்குதல் நடத்திய காலத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு நாளை முதல் விலக்கிக்கொள்ளப்படவிருக்கிறது.
இதற்கான அறிவிப்பை ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாபி வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் சாலைத் தடுப்புக்கள் உள்பட பல தடைகள் அகற்றப்பட்டன. மேலும் இப்பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டால் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இருக்கும் சிரமங்கள் குறையும் என்று பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 Comments