Ticker

6/recent/ticker-posts

உலகக் கிண்ண கிரிக்கெட் : வரலாறு காணாத பாதுகாப்பு எற்பாடு


பெப்ரவரி 14ஆம் தேதி தொடங்க உள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, ஐ.சி.சி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 14ஆம் தேதி முதல் மார்ச் 29ஆம் தேதி வரை ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்தில் 2015ஆம் ஆண்டுக்கானஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

உலகக் கிண்ண போட்டி குறித்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் அளித்த ஒரு பேட்டியில், "ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் இந்த உலகக் கிண்ண போட்டியில் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாகும்.

முந்தைய போட்டிகளை விட இந்த போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பரிசுத் தொகைக்கு அடுத்தபடியாக பாதுகாப்புக்கு அதிகம் செலவிடப்படுகிறது.

அடுத்த சவாலான விஷயம் மேட்ச் பிக்சிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் போன்ற சூதாட்டங்களாகும். இதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை ஐ.சி.சி. மேற்கொண்டு இருக்கிறது." என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments