Ticker

6/recent/ticker-posts

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு! ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டடுள்ளது


கடும் பனிப்பொழிவு காரணமாக இந்தியாவின் காஷ்மீரில் ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

இந்திய வடமாநிலங்களில் குளிர் அதிகமாக இருக்கிறது. காஷ்மீர், இமாசலபிரதேம் ஆகிய மாநிலங்களில் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்வது போல் பனிப்பொழிவு காணப்படுகிறது. குறிப்பாக காலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது.

ஸ்ரீநகரில் சாலைகளில் பனி உறைந்து கிடக்கிறது. வீடுகளின் கூரைகள், மரங்கள் வெள்ளை போர்வையை போர்த்தியது போல் பனிப்பொழிவால் மூடிக்கிடக்கின்றன. குப்வாரா நகரில் அரை அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் காணப்படுகின்றன. குல்மார்க் பகுதியில் சில இடங்களில் பனிப்பாறைகள் சரியும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Post a Comment

0 Comments