மஸ்கெலியா, மவுஸாக்கலை நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்றுள்ளது.
மஸ்கெலியா குயின்ஸ்லன் தோட்டத்தில் வசிக்கும் மேற்படி இரு இளைஞர்களும் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் விளையாட செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதன் பின் மவுஸாக்கலை நீர்தேக்கத்தின் டெனியன் தோட்ட நீர்தேக்கப் பகுதியில் நீராட சென்ற அவர்களில் ஒருவர் நீராடி கொண்டிருக்கும் வேளையில் திடீரென அவர் நீரிழ் மூழ்கும் அபாயத்தைக் கண்டு, அவரை் காப்பற்ற மற்றையவர் முயற்சி செய்யும் வேளையில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அதன் பின் சம்பவ இடத்திற்கு சென்ற பிரதேச மக்கள் தேடும் பணியில் ஈடுபட்ட போது சுமார் ஒரு மணித்தியால நேரத்தின் பின் சடலத்தை நீர்தேக்கத்திலிருந்து மீட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவா்கள் மஸ்கெலியா குயின்ஸ்லன் பகுதியை சேர்ந்த ரஜேந்திரன் யோகஸ்வரன் (வயது – 19), விஜயரட்ணம் கிருஷ்ணகுமார் (வயது - 17) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனா்.
குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனா்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







0 Comments