பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட பதவி விலகினால், அந்தப் பதவி சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜயந்த கெடகொட பதவியை ராஜினாமா செய்தால் அந்த பதவி வெற்றிடத்திற்கு, சரத் பொன்சேகாவிற்கு வழங்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு கடந்த ஜனவரி மாதம் 21ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரத் பொன்சேகாவிற்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவரை விடுதலை செய்வதாக அறிவித்திருந்தார். இராணுவ நீதிமன்றில் குற்றவாளிக்கப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா சிறைத்தண்டனையையும் அனுபவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments