ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இந்திய விஜயத்தின் போது 17 பேரை மட்டுமே அழைத்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியுடன் பயணம் செய்யும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 17 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
நல்லாட்சியை ஏற்படுத்துவது தொடர்பிலான உறுதி மொழிகளின் போது
அதன் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் செய்யும் முதலாவது வெளிநாட்டு விஜயத்தின் போது பங்கேற்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 17 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இந்திய விஜயம் மேற்கொண்ட போது 72 பிரதிநிதிகளை அழைத்துச் சென்றிருந்தார். இதற்காக அவர் தனியான விமானமொன்றையும் பயன்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண பயணிகள் விமானத்தில் 17 பிரதிநிதிகளுடன் இந்தியாவிற்கான விஜயத்தை நாளை ஆரம்பிக்க உள்ளார்.
.jpeg)
0 Comments