Ticker

6/recent/ticker-posts

நான் அமெரிக்கா வரும் இஸ்ரேல் பிரதமரை சந்திக்க மாட்டேன் - ஒபாமா அறிவிப்பு


அமெரிக்கா வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவை தான் ஏன் சந்திக்கப் போவது இல்லை என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸின் சபாநாயகர் ஜான் போஹ்னர் வரும் மார்ச் மாதம் 3ம் தேதி நடக்கும் கூட்டு சபை கூட்டத்தில் பேசுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த கூட்டத்தில் பேசுவதற்காக நேதன்யாஹு வாஷிங்டன் வருகிறார். ஆனால் அவரை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சந்தித்து பேசப் போவது இல்லை. இந்நிலையில் இது குறித்து ஒபாமா, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில், இஸ்ரேலில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு முன்பு எந்த தலைவர்களையும் சந்தித்து பேசுவது இல்லை என்பது எங்களின் வழக்கம். எனக்கு என்ன தான் மெர்கலை பிடித்திருந்தாலும் ஜெர்மனியில் தேர்தல் நடக்கும் நேரத்தில் அவர் அமெரிக்கா வந்தால் வெள்ளை மாளிக்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட மாட்டாது. அவரும் என்னை சந்திக்க வேண்டும் என கேட்க மாட்டார் என்றார். 

அமெரிக்கா வரும் நேதன்யாஹு இஸ்ரேலுக்கு ஈரானால் தான் பேராபத்து என்பதை வலியுறுத்தி பேச உள்ளார் என்று கூறப்படுகிறது. நேதன்யாஹு அமெரிக்கா செல்வது இரு நாட்டு உறவுகளுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலிய கட்சிகள் கருதுகின்றன.

Post a Comment

0 Comments