ஹிந்தி சுப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஷமிதாப்’ படம் இன்று உலகெங்கும் வெளியாகின்றது. தமிழகத்தில் அதிக அரங்குகளில் வெளியாகும் முதல் ஹிந்திப் படம் என்ற பெருமையை ஷமிதாப் பெற்றுள்ளது.
கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் முதன் முறையாக இப்படத்தின் மூலம் நாயகியாக திரைக்கு அறிமுகமாகின்றார். இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை ஹிந்தி திரை இயக்குநர் ஆர் பால்கி எழுதி இயக்கியுள்ளார்.
இன்று உலகம் முழுவதும் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘ஷமிதாப்’ படம் சென்னையில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், தமிழகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட அரங்குகளிலும் வெளியாகின்றது. தமிழகத்தில் இத்தனை அரங்குகளில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘ஷமிதாப்’ என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments