Ticker

6/recent/ticker-posts

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் அடையாள அட்டையிலும் வங்கி கணக்கிலும் போலி விபரங்கள்?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச நடத்தி வரும் சிறிலிய சவிய என்ற அரச சார்பற்ற நிறுவனம் இலங்கை வங்கியின் சுதுவெல்ல கிளையில் வைத்திருக்கும் 143100146235069 என்ற இலக்கங்களை கொண்ட வங்கி கணக்கை திறக்க போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் அதிகாரம், எஸ். ராஜபக்ச, ஏ.எம்.ஜே.ஏ. குமாரி, கே.கே. திஸாநாயக்க ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் எஸ். ராஜபக்ச என்பவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச ஆவார். அவரது தேசிய அடையாள அட்டை எண் 222222222V என குறிப்பிடப்பட்டுள்ளது.
குமாரி என்ற பெண்ணின் தேசிய அடையாள அட்டை எண் 111111111V என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கே.கே. திஸாநாயக்க என்பவரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் 587060958V எனக் குறிப்பிட்டுள்ளது.
கே.கே. திஸாநாயக்க என்பவரின் பெயரில் அதே வங்கியில் வேறு ஒரு வங்கி கணக்கு இருப்பதுடன் அதற்கு வேறு ஒரு தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.
சிறிலிய சவிய என்ற அரசசார்பற்ற நிறுவனத்திற்குரிய வங்கி கணக்கில் 43.2 மில்லியன் ரூபா இருப்பில் உள்ளது. அந்த அமைப்பின் விலாசம் கால்டன் பங்களா தங்காலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் ஹெல்பின் அம்பாந்தோட்டை என்ற அரசசார்பற்ற நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து பல கோடி ரூபா சுனாமி நிதியுதவி கிடைத்திருந்தது. அந்த பணத்தை மோசடி செய்ததாக மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சிறிலிய சவிய என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் வங்கி கணக்கு போலியான தகவல்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருது பாரதூரமான விடயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments