Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற மோசடிகளை ஆராய குழு நியமனம்

ஸ்ரீலங்கன் விமான சேவையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள், மற்றும் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு  நால்வர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஜே.சி வெலிஅமுன தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூ.எச் பலிஹக்கார, பி.ஏ.டபிள்யூ அபேவர்த்தன, எம்.கே பண்டார ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னைய பணிப்பாளர் குழு மற்றும் நிர்வாகம் ஆகியன, அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளமை தொடர்பிலும் விமானங்களை தவணைக் கொடுப்பனவில் பெற்றுக்கொள்ளல், மற்றும் கொள்வனவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் புதிய குழு ஆராயவுள்ளது.
25 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களின் கொள்வனவு மற்றும் சேவைகள் தொடர்பான நடவடிக்கைகள், நிர்வாக சேவைகளை முன்னெடுப்பதில் உள்ள தடங்கல்கள் என்பன குறித்தும், கண்டறிய புதிய குழுவினால் சாட்சியங்கள் திரட்டப்படவுள்ளன.
மார்ச் 30 ஆம் திகதிக்கு முன்னர் விசாரணைகளை நிறைவுசெய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments