Ticker

6/recent/ticker-posts

இன்டா்போலின் பிடியில் இறுகப் போகும் பசில் ராஜபக்ஷ?


சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் உதவியுடன் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.


அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்ன சீன ஊடகமொன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற மிகப் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பாரிய நிதி மோசடிகளுடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் நிறைவைத் தொடர்ந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு விஜயம் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments