இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக் கடிதத்தில் கூறி இருப்பதாவது:– இலங்கையில் வாழும் தமிழர்களின் தொடர் இன்னல்கள் குறித்து என்னுடைய இந்தக் கடிதத்தை, இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்களை டெல்லியில் சந்திக்கவிருக்கும் வேளையில் அனுப்பியிருக்கின்றேன்.இலங்கையில் வாழும் தமிழர்களின் பேராதரவைப் பெற்றே சிறிசேன இலங்கை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் திரும்பப் பெறப்பட்டுவிடுமென்றும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வீடுகளை திரும்பப் பெற்று விடலாமென்றும், இனியும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்பட மாட்டார்கள் என்றும், சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் கூடிய அமைதியான வாழ்வுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்றும், முப்பதாண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வரும் 13வது திருத்தம் நேர்மையான முறையில் அமலுக்குக் கொண்டு வரப்படுமென்றும், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுமென்று தமிழர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் தமிழர்களைச் சோர்வடையச் செய்திருக்கின்றன.
தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும், செய்யப்பட்ட அறிவிப்புகளும் பல, ஆனால் இதுவரை நடைமுறைக்கு வந்தது ஒரு சிலவே, அல்லது எதுவும் நடைமுறைக்கே வரவில்லை என்று தான் கூற வேண்டும்.
ஒரு சில நாட்களிலே சாதித்துக் காட்டப்படக் கூடியவை கூட இதுவரையில் நடைபெற வில்லை, ஒரு காலக் கட்டத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டியவைகளுக்கான அடையாளங்களும் தோன்றவில்லை.
தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் திரும்பப் பெறப்படவில்லை. தமிழர்களுக்குச் சொந்தமான வீடுகளும், நிலங்களும் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை.
தமிழர்களின் சுதந்திரமான வாழ்க்கை முறைகளை சிதைத்திடும் வண்ணம் ஏற்கனவே இருந்து வரும் இலங்கை அரசின் கண்காணிப்பு திரும்பப் பெறப்படவில்லை.
இவற்றையெல்லாம் விட, மிக மோசமான காரியம் ஒன்று தற்போது நடந்திருக்கின்றது.
இலங்கை ஜனாதிபதி சிறிசேன 02.2.2015 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் “பாரம்பரியமாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவம் (தரைப்படை, கடற்படை, விமானப்படை) பொது அமைதியினை நிலைநாட்டிப் பேணுவதற்கான கடமைகளை மேற்கொள்ளும்” என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. (நகல் இணைக்கப்பட்டுள்ளது) அவரின் இத்தகைய அறிவிப்பு எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.
ஏற்கனவே உறுதி அளித்தவாறு 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வர இலங்கையின் புதிய அரசு முயற்சி மேற்கொண்டாலும், அது உண்மையான, முறையான, அனைத்து அதிகாரங்களையும் வழங்குவது எனும் நீண்ட பயணத்தில், எடுத்து வைக்கும் முதல் அடியாக மட்டும் இருக்குமே தவிர வேறல்ல. நிரந்தரமான அரசியல் தீர்வையே இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து கோரி வருகிறார்கள்.
எங்களைப் பொறுத்த வரையில் நாங்கள், உலகெங்கிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில், அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை அவர்களே தேர்வு செய்து கொள்வதற்கு ஏதுவாக, ஐ.நா. மேற்பார்வையில் “பொது வாக்கெடுப்பு” நடத்த வேண்டுமென்றே தொடர்ந்து சொல்லி வருகிறோம்.
இலங்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், சர்வதேச சட்ட மீறல்கள், மனித உரிமை மீறல்கள், மற்றும் இனப் படுகொலை குறித்து உலக நாடுகள் தெளிவாக அறியும்.
சர்வதேசக் குழு ஒன்றை அமைத்து, இலங்கையில் நடைபெற்ற கொடுமைகள் குறித்து விசாரணை செய்ய இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இலங்கை அரசால் முறியடிக்கப்பட்டுள்ளன.
தற்போது இலங்கையின் வடக்கு மாகாண சபையில், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
இந்தத் தீர்மானத்தினை இந்திய மத்திய அரசு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் “தீர்மான” வடிவில் எடுத்துச் செல்வது பற்றி ஆழ்ந்து பரிசீலனை செய்ய வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.
தாங்கள் இலங்கை ஜனாதிபதியோடு மேற்கொள்ளவிருக்கும் விவாதங்களின் மூலம் தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றினை ஏற்படுத்தினால் நான் தங்களுக்குப் பெரிதும் நன்றியுடையவன் ஆவேன்.
இலங்கை ஜனாதிபதியோடு தாங்கள் மேற்கொள்ள விருக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் நல்ல விளைவுகளைத் தரும் முடிவுகள் வெளிவரும் என்று தமிழகத்தில் வாழும் நாங்களும், சர்வதேச தமிழர்களும் பெரிதும் எதிர்பார்க்கிறோம்

0 Comments