Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளவுள்ள முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு சேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜானாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திருப்பதி மற்றும் புத்தகாய ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments