சிகரெட்டுக்களை உற்பத்தி செய்யும் சிலோன் டொபாகோ நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் மகிந்த ராஜபக்ச தன்னை அவமானப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த அரசில் மகிந்த ராஜபக்ச சிகரெட் பக்கெட்டுகளில் எச்சரிக்கை புகைப்படங்கள் பதிக்கப்பட வேண்டும் என தான் தெரிவித்துள்ளதை சிலோன் டொபாகோ நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனாவை நியாயப்படுத்துமாறு கூறியுள்ளார்.
அத்துடன் சிகரெட்டுக்களை உற்பத்தி செய்யும் குறிப்பிட்ட நிறுவனம் எனக்கு எதிராக வழக்கு தொடுக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தன்னை அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் இச்செயற்பாடு நியாயமற்றது என்பதுடன் அதிகளவில் ஊழல் மோசடிகளில் சுகாதார அமைச்சு அதிகாரிகளே ஈடுபடுபவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments