Ticker

6/recent/ticker-posts

உலகக் கிண்ண போட்டிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாழ்த்துத் தெரிவித்த மோடி

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் சார்க் நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நரேந்திரமோடி அந்தந்த நாடுகள் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. இதில் தெற்காசியாவை சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
இதனிடையே நரேந்திரமோடி, ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கானி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்தந்த நாட்டு கிரிக்கெட் அணிகள் சிறப்பாக விளையாட வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் தளத்திலும் கருத்துப்பகிந்துள்ளார்.

Post a Comment

0 Comments