Ticker

6/recent/ticker-posts

மைத்திரியை அவமானப்படுத்தினாரா மஹிந்த ?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிலோன்டொபாகோ நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் இது நிகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிகரெட் பெட்டிகளில் புகைப்படங்களுடனான எச்சரிக்கை இடம்பெறவேண்டுமென தான் தெரிவித்ததை நியாயப்படுத்துமாறு சிலோன்டொபாகோ நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி தனக்கு உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட நிறுவனம் எனக்கு எதிராக வழக்கு தொடுக்கும் என மகிந்த அச்சுறுத்தினார். அவ்வாறு அவர்கள் முன்னிலையில் அவர் நடந்துகொண்டது நியாயமற்றது என சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சக அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ள மைத்திரிபால சிறிசேன அவர்களே மிகமோசமாக ஊழல்களில் ஈடுபடுபவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments