முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சட்டவிரோதமான முறையில் ஈடுபட்டதாக கருதப்படும் 1935 மில்லியன் டொலர் பணத்தை நான்கு இலங்கையர்கள் டுபாய் வங்கியிலிருந்து பஹாமஸ் வங்கியிலிருந்து மாற்றியுள்ளதாக அறிய வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணமே இவ்வாறு மாற்றப்பட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. விசாரணைகளை நடத்த நியமிக்கப்பட்ட அதிகாரிகளே இவ்வாறு இரகசியமாக தகவல்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த விடயம் குறித்து ஜே.வி.பியினர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அரசாங்கத்தைச் சேர்ந்த தரப்பினர் விசாரணைகள் குறித்து, குறித்த நான்கு இலங்கையர்களுக்கு இரகசியமாக தகவல்களை வழங்கிய காரணத்தினால் அவர்கள் துபாய் வங்கிலியிலிருந்து கணக்குகளை பஹாமஸிற்கு மாற்றியுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த விபரங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொண்டு நாட்டுக்கு இது பற்றிய தகவல்களை அம்பலப்படுத்துமாறு ஜே.வி.பி இன்று ஜனாதிபதியிடம் கோரவுள்ளது.

0 Comments