Ticker

6/recent/ticker-posts

19 வது திருத்தச்சட்டம் : ஹெல உறுமய சீற்றம்

19வது திருத்தச் சட்டம் வர்த்தமாணியில் வெளியிடப்பட்டமைக்கு ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி பதவியை இரத்து செய்வது குறித்து ஹெல உறுமய ஒருபோதும் கதைக்கவில்லை என்றும் நிறைவேற்று அதிகாரத்தில் காணப்படும் சில அதிகாரங்களை இரத்து செய்வது தொடர்பில் மாத்திரமே கதைத்ததாகவும் அவர் கூறினார்.

அதவேளை, 19வது திருத்தச் சட்டத்தை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக பிரதமர் அமைச்சரவையில் சமர்பித்ததாகவும் ஆனால் அதனை வர்த்தமானியில் வெளியிட ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யாப்பின் 30(01) சரத்திற்கு அமைய நிறைவேற்று பிரதானி, அரசாங்க பிரதானி, முப்படை தலைவர் ஜனாதிபதியாக இருக்கின்ற போதிலும் 19 (01) சரத்திற்கு அமைய அரசாங்க பிரதானியாக பிரதமர் இருப்பதாக சம்பிக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் 19வது திருத்தச் சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட தமது கட்சி எதிர்ப்பு தெரிவித்ததாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Post a Comment

0 Comments