Ticker

6/recent/ticker-posts

மோசடி குற்றச்சாட்டுள்ள சேனுக்காவிற்கு தாய்லாந்து தூதுவா் பதவி ! மைத்திாி அரசின் மற்றுமொரு தவறான முடிவு !

   நாமலுடன் நடனமாடும் செனுக்கா
கடந்த மஹிந்த ஆட்சியில் பல மோசடி குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சேனுகா செனவிரட்னவை தாய்லாந்தின் இலங்கைக்கான தூதுவராக நியமித்தமைக்கு ஜே.வி.பி கட்சிஎதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
சேனுகாவை இராஜதந்திர பதவியில் அமர்த்தியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் நேற்று குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது தெரிவித்துள்ளார்.
சேனுகா மீது பாரியளவில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜெனீவா தூதரகத்தின் புனரமைப்பு பணிகளை விடுதலைப் புலிகளின் ஆதரவாளா் ஒருவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியதாகவும் அதன் போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் சேனுக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த விசாரணைகள் பூர்த்தியாகாத நிலையில் மேற்படி பதவியை இவருக்கு மைத்திாி அரசு வழங்கியிருக்கிறது.
முன்னாள் வெளிவிவகார கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுடன் இணைந்து மோசடிகளில் ஈடுபட்டதாக இவா் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி அதன் பின்னர் பதவிகளை வழங்கினால் அதில் தவறில்லையென்று ஜே.வி.பி கருத்து வெளியிட்டுள்ளது.
எனினும் பாரிய குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கு எவ்வித விசாரணையும் இன்றி இவ்வாறு பதவி வழங்கியது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments