Ticker

6/recent/ticker-posts

சயீத் அல் ஹுசைனை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயித் அல் ஹுசைனை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ள மங்கள சமரவீர, அல் ஹுசைனுக்கு இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிடுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த பல்வேறு முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments