Ticker

6/recent/ticker-posts

இலங்கை விவகாரம்: இந்திய நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு

இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை மீது, இந்தியா தனது நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என்று மாநிலங்களவைவில் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.   

இது தொடர்பாக மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பைக் கொண்டுவந்த கனிமொழி,  ஐ.நா. மனித உரிமை ஆணையம், இலங்கை அரசு மீதான தனது போர்க்குற்ற அறிக்கையை மார்ச் மாதத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிக்கை செப்டம்பர் மாதக் கூட்டத்தொடரில் வெளியிடுவதைச் சுட்டிக்காட்டினார்.  ஐ.நா. அறிக்கையை சமர்ப்பிப்பது தாமதமாவதைத் தடுக்க, இந்த விவகாரத்தில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தினார். 

ஐ.நா.வில் உள்ள இந்தியக் குழுவினர், இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராகவும், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கை விவகாரத்தில் ஐ.நா.வின் அறிக்கை தள்ளிப்போவதன் மூலம் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என்றும் கனிமொழி வலியுறுத்தினார். 

Post a Comment

0 Comments