ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச என்றால் அதற்கு தாம் உடன்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச என்னுடைய நல்ல நண்பாராவார், அவரை அவரது குடும்ப உறுப்பினர்களே சிதைத்தனர். தேர்தலின் பின்னரும் மஹிந்தவை சந்தித்தேன் சுமூகமாக பேசிக்கொண்டோம்.
அண்மையில் எனது மனைவியுடனும் அவர் தொலைபேசியில் பேசியிருந்தார். தனிப்பட்ட ரீதியில் மஹிந்தவுடன் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பிழையான தீர்மானங்களின் போது நான் அறத்கு எதிராக குரல் கொடுத்தேன். எனது பேச்சிற்கு மதிப்பளித்து சில தீர்மானங்களை மஹிந்த எடுத்தார்.
எனினும் எவ்வளவு நட்பு இருந்தாலும் மஹிந்தவிற்கும் அவரது குடும்பத்திற்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் பணிகளுக்கு இடையூறு செய்ய அனுமதிக்கப் போவதில்லை என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

0 Comments