அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நேற்று செவ்வாயக்கிழமை கொழும்பு ரேனுகா ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரின் கட்சிக்காரர்கள் புகுந்து குழப்பம் விளைவித்ததில் அங்கு பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டது.
வில்பத்து விவகாரத்தின் மறைக்கப்பட்ட பகுதி எனும் தொனிப்பொருளில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட குவைதிர் கான், அவரது சட்டத்தரணி முஸ்லிம் காங்கிரஸின் வட மேல் மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷா ஆகியோர் நடத்திய ஊடகவியளார் சந்திப்பின் போதே இந்த குழப்பம் ஏற்பட்டது.
ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களோடு அமர்ந்திருந்த மேல்
மாகாண சபையின் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.பாயிஸ், செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தப்பட்ட றிஷாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும் அவை அரசியல் வங்குரோத்து நிலையைக் காட்டி நிற்பதாகவும் தெரிவித்து தொடர்ச்சியாக வாக்குவாதப்படவே இந்த குழப்பம் ஏற்பட்டது.
இதனையடுத்து றிஸ்வி ஜவஹர்ஷா, குவாதிர் கான் தரப்பினருக்கும், றிஷாத்தின் கட்சி உறுப்பினரான பாயிஸூடன் வந்திருந்தவர்களுக்கும் வாய்த்தர்க்கம் முற்றியது.
பாயிஸ் உள்ளிட்டவர்களுக்கு செய்தியாளர் சந்திப்புக்கு தாம் அழைப்பு விடுக்கவில்லை எனவும் அவர்கள் செய்தியாளர் சந்திப்பை குழப்ப திட்டமிட்டு வந்ததாகவும் றிஸ்வி ஜவஹர்ஷா குற்றம் சுமத்தியதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்ற ரேனுகா ஹோட்டலின் எந்தூரியம் அறையிலிருந்து ஏற்பாட்டாளர்களால் வெளியேற்றப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு தொடர்ந்து இடம்பெற்றது.
ரிசாத்துக்கு சொந்தமாக 3000 ஏக்கர் காணி: பல மில்லியன் சொத்துக்களும் உள்ளன: சட்டத்தரணி அம்பலம்
அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சொந்தமாக மன்னார் மாவட்டத்தில் 3000 ஏக்கர் காணி உள்ளது. காணியனைத்தும் அவருடைய மனைவி, தந்தை, சகோதரர்கள் என உறவினர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவைதொடர்பான அனைத்து ஆதாரங்கள் அடங்கிய கோப்புகள் எங்களிடம் உள்ளது என தெரிவித்த வட மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா, குறுகிய காலப்பகுதியில் ரிசாத்துக்கு எவ்வாறு பல மில்லியன் ரூபா சொத்துக்கள் கிடைக்கப்பெற்றது எனவும் கேள்வியெழுப்பினார்.
யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து நிர்கதியான மக்களைக் காட்டி அமைச்சர் றிஷாத் பதியுதீன் பணம் சம்பாதித்து வருவதாகவும் அதனாலேயே வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இன்னும் அகதிகளாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது சேவை பெறுனரான, றிஷாத் பதியுதீனுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவில் சொத்துக் குவிப்பு தொடர்பில் முறைபாடளித்த குவாதிர் கான் சார்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது சேவை பெறுனரான, றிஷாத் பதியுதீனுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவில் சொத்துக் குவிப்பு தொடர்பில் முறைபாடளித்த குவாதிர் கான் சார்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது தன்னிடம் 4 கோடி ரூபா கப்பம் கோரியதாக றிஷாத் நாடகம் ஆடுவதாகவும் அரசியல் இலாபம் கருதி வில்பத்து விவகாரத்திலும் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்துவதாகவும் இதன் போது அவர் குற்றம் சுமத்தினார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
2000ம் ஆண்டு ரிஷத் என்பவர் அரசியலுக்கு வரும் போது அவருக்கு சொந்தமாக ஒரு மோட்டார் சைக்கிளோ அல்லது காணித் துண்டோ இருக்கவில்லை. ஆனால் இன்று அவருக்கு சொந்தமாக மன்னார் தீவில் மட்டும் 3000 ஏக்கர் காணி உள்ளது.
இது அவரது நெருங்கிய உறவினர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தனையும் 2000ம் ஆண்டுக்கு பின்னர் சம்பாதிக்கப்பட்டவை.
இதனை விட அண்மையில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ரிஷாத்துக்கு சொந்தமான 60 மில்லியன், 49 மில்லியன் ரூபா பெறுமதியிலான இரு ஆதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவையெல்லாம் றிஷாத்தின் சொத்துக்களில் ஒரு பகுதியே.
உண்மையில் எமக்கு உள்ள சிக்கல் என்னவெனில் இத்தனை சிக்கல்களையும் அவர் எப்படி இந்த குறுகிய காலத்தில் சம்பாதித்தார் என்பதாகும். அது தொடர்பில் எனது கட்சிக்காரரால் கடந்த மார்ச் மாதம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
0 Comments