மஹிந்தவை பிரதமராக்க கையொப்பங்களைதிரட்டும் வேட்டையொன்றை மஹிந்த தரப்பினர் ஆரம்பித்துள்ளனர்.பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டினால் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி மகஜர் ஒன்றில் கையொப்பமிடப்பட உள்ளது.கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்ளிடம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளன.இந்த மகஜரில் கையொப்பமிடாத வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கு அளிக்கக் கூடாது என பகிரங்கமாக கோரப்பட உள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

0 Comments