Ticker

6/recent/ticker-posts

ஐ.தே.க அரசாங்கம் உருவாகுவதனை தடுக்க முடியாது: ஹிருணிக்கா

இம்முறை பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அதிக வாக்குகளை பெற்று ஸ்திரமான அரசாங்கம் உருவாகுவதனை யாராலும் தடுக்க முடியாதென ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
கொல்லன்னாவ ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சார அலுவலகத்தில் இடம்பெற்ற பொது மக்கள் விழிப்புணர்வு கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
நான் எனது தந்தையை போன்று ஒரு போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டு செல்லவிருந்த ஒருவர் அல்ல. மேல் மாகாண சபை தேர்தலில் அதிக
வாக்குகளை பெற்று வெற்றியடைந்த நான் அன்றில் இருந்து அக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட்டேன்.
அதன் போது மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நாட்டையும், நாட்டு மக்களையும் குறித்து சிந்தித்து செயற்படுவதற்கு பதிலாக குடும்பத்தின் தனிப்பட்ட தேவைகளுகளை நிறைவேற்றி கொள்வதற்கு மேற்கொள்கின்ற முயற்சி மற்றும் அதற்காக பாரிய அளவில் நாடு பூராகவும் ஊழல் மோசடிகளை மேற்கொண்துடன் போதை பொருள் வியாபாரங்களுக்கும் இடமளிக்கப்பட்டது.
இது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருந்தவர்கள் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியினுள் போராடுவதற்கு ஆரம்பித்தார்கள். இதற்கிடையில் தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டார்.
நான் எனது வாழ்க்கையின் இச் சிறிய பகுதியில் பெரிய அளவிலான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளேன். அவற்றில் ஒன்று தான் மஹிந்த ராஜபகசவின் அரசாங்கத்தில் இருந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினேன்.
நான் வாழ்வுக்கும், சாவுக்கும் இடையில் போராடி கொண்டிருப்பதாக குறித்த சந்தர்ப்பத்தில் பலர் கூறினார்கள். எனினும் இதுவரையில் எனது தீர்மானங்கள் எதுவும் தவறாகவில்லை. அன்று நல்லாட்சிக்காக மைத்திரிபால சிறிசேன சென்ற பயணம் வெற்றி பெற்றதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments