பிரித்தானிய முன்னாள் இளவரசியான டயானா கார் விபத்தில் இறந்தவுடன், அந்த செய்தியை கேட்ட மகாராணி அதிர்ச்சியில் கூறியுள்ள வார்த்தை தற்போது வெளிச்சத்திற்கு வந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
lankasri.com
பிரித்தானிய இளவரசரான சார்லஸின் மனைவியும் இளவரசர் வில்லியமின் தாயாருமான டயானா கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரீஸில் நிகழ்ந்த கார் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இளவரசியின் மரணம் சர்வதேச அளவில் துக்கத்தை ஏற்பட்டிருந்த நிலையில், அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் தற்போது வரை நீடித்து வருகிறது.
இந்நிலையில், அரச சுயசரிதை எழுத்தாளரான Ingrid Seward என்பவர் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
டயானா கார் விபத்தில் சிக்கி இறந்து விட்டார் என்ற செய்தியை மகாராணியான இரண்டாம் எலிசபெத்திடம் கூறும்போது, அவர் அதிர்ச்சியில் “டயானாவின் கார் பிரேக்கில் யாரோ ஒரு நபர் திட்டமிட்டு கிரீஸ் எண்ணெய்யை தடவியிருக்க வேண்டும்”(Someone must have greased her brakes) என ஆவேசமாக கூறியதை அருகில் இருந்த ஒரு நபர் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மகாராணியின் இந்த கூற்றின் மூலம், டயானா விபத்தில் இறந்திருக்க வாய்ப்பில்லை என்றும், அது ஒரு திட்டமிடப்பட்ட சதி தான் என்பது அவரது வார்த்தையிலேயே விளங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், டயானாவிற்கும், மகாராணிக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்பதையும் இது காட்டுவதாக அந்த எழுத்தாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், டயானாவின் மரண செய்தியை கேட்ட பின்னரும், அரச குடும்பத்தினர் மிகவும் துக்கமில்லாமல் மிகச்சாதரணமாக இருந்ததும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய முன்னாள் இளவரசியான டயானா இறந்து சுமார் 17 வருடங்களுக்கு பிறகு அவரது மரணம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments