Ticker

6/recent/ticker-posts

பிரபாகரனின் சடலம் கிடைத்தாலும் ரணில் அரசாங்கம் தோண்டும்-மஹிந்தானந்த

சடலங்களைத் தோண்டியெடுத்து அரசியல் லாபம் தேடும் நடவடிக்கையில் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பிரபாகரனின் சடலம் இவர்களுக்கு கிடைத்தாலும் அதனையும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பிரச்சாரத்துக்கு எடுத்துக் கொள்ளும் என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ரகர் விளையாட்டு வீரர் வசீமின் மரணம் தொடர்பில் தற்பொழுது நடைபெற்றுவரும் விசாரணைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை சீரழிப்பதற்கு திருடன் திருடன் என அவர் மீது குற்றம் சாட்டினர். தற்பொழுது, அவரை கொலைகாரன் எனக் கூற முயற்சி எடுக்கின்றனர்.
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் விட்ட தவறை தற்பொழுது அவர்கள் நன்கு விளங்கியுள்ளனர். அதனைத் திருத்திக் கொள்ள எதிர்வரும் 17 ஆம் திகதியை எதிர்பார்த்துள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

Post a Comment

0 Comments