Ticker

6/recent/ticker-posts

ஹெரோயின் வைத்திருந்த பெண்கள் இருவர் கைது

தெமடகொடை மற்றும் ரத்மலானை பிரதேசங்களில் நேற்று சனிக்கிழமை (01) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோய்ன் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இவர்கள் இருவரிடமும் இருந்து 20 கிராம் 290 மில்லிகிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து 5 கிராம் 150 மில்லிகிராமும் தெமடகொடை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து 15 கிராம் 140 மில்லிகிராமும் உடைய ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரையும் கல்கிஸை மற்றும் மாளிகாவத்தை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Post a Comment

0 Comments