பொதுத் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளிவரும் நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தோல்வியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, அந்தக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.
இந்த நிலையின் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏ.எப்.பி செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தோல்வியை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

0 Comments