Ticker

6/recent/ticker-posts

டாக்டர் அப்துல்கலாம் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தற்காலிகமாக வெயில், மழையில் இருந்து காக்க புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை

ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை  வெயில், மழையில் இருந்து காக்க புதிதாக  மேற்கூரை  அமைக்கப்பட்டுள்ள  பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அங்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் வருகின்றனர்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ராமேசுவரம் பேய்க்கரும்பில் தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அங்கு 24 மணி நேரமும் பலத்த
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது. அங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவ–மாணவிகள் இரவு பகலாக தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். நள்ளிரவு நேரத்திலும் மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அஞ்சலி செலுத்த வந்த மாணவர்கள் மாணவிகள் குழந்தைகள் இந்தியாவை 2020–ம் ஆண்டில் வல்லரசு நாடாக உருவாக்க அப்துல் கலாம் வகுத்துத்தந்த தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் இளைஞர்கள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments