மூன்று வயது சிறுவன் ஒருவன் அமெரிக்க நகரொன்றின் மேயராகப் பதவியேற்றுள்ளான்.
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் உள்ள டார்செட்டில் 22 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
அந்த ஊருக்கு மேயரைத் தெரிவு செய்யும் பணி நடந்தது.
டார்செட்டில் நடந்த வருடாந்திர உணவுத் திருவிழாவின்போது மக்கள் தங்களுக்குப் பிடித்த நபரின் பெயரை எழுதி ஒரு பெட்டியிலிட்டனர்.
பெட்டியைக் குலுக்கி அதில் இருந்து ஒரு சீட்டை எடுத்தபோது அதில் மூன்று வயது சிறுவன் ஜேம்ஸ் டப்ட்டின் பெயர் வந்தது.
இதையடுத்து, ஜேம்ஸ் கடந்த 2 ஆம் திகதி டார்செட் மேயராக பொறுப்பேற்றுக் கொண்டான்.
ஜேம்ஸிற்கு முன்னாள் மேயரான அவரது 6 வயது சகோதரர் ரோபர்ட் டப்ட் அறிவுரை வழங்கியுள்ளார்.
ரோபர்ட், டார்செட்டின் மேயராக 3 மற்றும் 4 வயதில் இருமுறை இருந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ரோபர்ட் கூறுகையில், மக்களிடம் அன்பாக இருக்கும்படி என் தம்பியிடம் தெரிவித்துள்ளேன், என்றார்.
இந்நிலையில் இது குறித்து ரோபர்ட் கூறுகையில், மக்களிடம் அன்பாக இருக்கும்படி என் தம்பியிடம் தெரிவித்துள்ளேன், என்றார்.
இச்சிறுவர்களின் தாயார் எம்மா டப்ட்ஸ், தன் மகன்களை நினைத்துப் பெருமைப்படுவதாகவும் அவர்கள் மக்களுக்கு நிறைய நல்லது செய்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.

0 Comments