ஆப்கானிஸ்தானில் நிலைகொண்ட அமெரிக்க இராணுவத்தின் கால எல்லையை நீடிப்பதற்கு,ஜனாதிபதி பராக் ஒபாமா, ரகசிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்ட விடயம்,அம்பலமாகியுள்ளது.
2015ம் ஆண்டு வரை படை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, ரகசிய உத்தரவொன்றை ஜனாதிபதி பராக் ஒபாமா, அமெரிக்க படைகளுக்கு விடுத்திருந்தார் என, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களிலேயே இவ்வாறான ஒப்பந்தத்தில் ஜனாதிபதி ஒபாமா, ரகசியமாக கைச்சாத்திட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் படை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், விமான தாக்குதல்களை மேற்கொள்வதற்குமான ரகசிய உத்தரவின் மூலம், அமெரிக்க படைகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்திற்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளின் நடவடிக்கைகள் முற்றுப்பெறுமென, ஜனாதிபதி பராக் ஒபாமா இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த ரகசிய ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு பகிரங்கமாகியுள்ளதாக,நியூயோர்க் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

0 Comments