Ticker

6/recent/ticker-posts

புதிய தேர்தல் கருத்துக்கணிப்பின் படி ஐக்கிய தேசிய கட்சிக்கே அதிக ஆசனங்கள்!

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் முன்கூட்டிய புதிய கருத்துக்கணிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி ஐக்கிய தேசிய கட்சி அதிக ஆசனங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறக்கூடிய வாய்ப்பு இல்லை.
மூன்று கட்டங்களில் இந்த கருத்துக் கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிக வாய்ப்புள்ள தேர்தல், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு அதிக வாய்ப்புள்ள தேர்தல் மற்றும் பாரம்பரிய முறைமை ஆகிய மூன்று வகைகளிலும், ஐக்கிய தேசிய கட்சியே முன்னிலை பெற்றுள்ளது.
இதன்படி 98 தொடக்கம் 104 ஆசனங்களை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, 87 தொடக்கம் 93 ஆசனங்களை
கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு 13 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகின்ற தொகுதிகளில் 3 ஆசனங்களையும், ஈ.பி.டி.பி ஒரு ஆசனத்தையும் இன்னுமொரு சிறுபான்மை கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றும் வாய்ப்பு இருக்கிறது.
இதேவேளை, ஜே வி பி 15 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற நிலையில், அந்த கட்சிகள் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஐந்து முஸ்லிம் நாடாளுமன்ற ஆசனங்களும் ஐக்கிய தேசிய கட்சியையே சாரும்.
எனிவே ஐக்கிய தேசிய கட்சி 103 முதல் 109 ஆசனங்களைக் கொண்டிருக்கும்.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது ஜே வி பி ஆகிய கட்சிகளின் துணையுடன் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments