Ticker

6/recent/ticker-posts

எதிர்வரும் ஒருவார காலத்திற்கு ஊர்வலங்கள் நடத்த தடை

எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, தேர்தல் சட்டங்களின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த தடையை மீறி ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளை நடத்தும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றியை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் ஆற்றிய சிறப்புரையிலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments