முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தோல்வி அவரது நெற்றியில் எழுதப்பட்டு விட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் :
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் 113 ஆசனங்களை கைப்பற்றி தனியாக அரசாங்கத்தை அமைக்க முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் 113 ஆசனங்களை கைப்பற்றி தனியாக அரசாங்கத்தை அமைக்க முடியாது.
எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் தாவல்கள் அதிகரிக்கும். கட்சி மாறியே அடுத்த அரசாங்கம் அமைக்கப்படும் என்பதை நாங்கள் தெளிவாக கூறுகின்றோம். அதாவது கூட்டு அரசாங்கம் அடுத்து அமையும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 Comments