(சாய்ந்தமருது
எம்.எஸ்.எம்.சாஹிர்)
உமர் கத்தாப் விளையாட்டுக் கழகத்தின்
ஏற்பாட்டில் தலை சிறந்த மார்க்க
உலமாக்கள் கலந்து கொள்ளும் சமுதாய
விழிப்புணர்வு மாநாடு நாளை மறுநாள்
வெள்ளிக்கிழமை (29) ஏறாவூர் மிச் நகர்
ஆயிஷா பள்ளிவாசலுக்கு அருகாமையில், மாலை 4.30 முதல் இரவு 10.00 மணிவரை
நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம் மாநாட்டில் “வட்டி என்பது ஒரு
சாபக்கேடு” எனும் தலைப்பில் அஷ்ஷேக்
அப்துல் கனி ஹாமி மௌலவி,
“சுவனம் செல்லும் கூட்டத்தினர் யார்?” எனும் தலைப்பில்
அன்சார் தப்லீகி மௌலவி, “சீதனத்தால்
சீரழியும் சமுதாயம்” எனும் தலைப்பில் அப்துல்
ஹமீட் ஷரயீ மௌலவி ஆகியோர்
மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளனர்.
இந் நிகழ்வில் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டுக்
குழுவினர் அழைப்புவிடுக்கின்றனர்.
0 Comments