Ticker

6/recent/ticker-posts

நாமல் குமார என்ற நபர் ஜனாதிபதியின் ஓர் உளவாளி - சரத் பொன்சேகா

பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதி செய்ததாக வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ள கருத்து பாரிய பிரச்சினைக்குரிய ஒன்றாகும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

இது தொடா்பாக சபாநாயகரிடம் சரத் பொன்சேகா வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார்.  48 மணித்தியாலத்துக்குள் பொலிஸ் மா அதிபரை பாராளுமன்றத்திற்கு அழைத்து இது தொடர்பில் விசாரித்து தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சபாநாயகரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
நாமல் குமார என்ற நபர்  ஜனாதிபதியின் உளவாளி எனவும், அவர் பொதுஜன பெரமுன கட்சியில் அம்பாறை மாவட்ட வேட்பாளராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் சரத் பொன்சேகா எம்.பி. சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments