
காலி சமனல விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற மேதின நிகழ்வின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாடு தற்போது பொருளாதார ரீதியில் பின்நோக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இவ்வாறான சிக்கலான மற்றும் நெருக்கடியான சூழலில் முன்னோக்கி செல்ல அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் நிறைவேற்றப்பட்டுள்ள யோசனை குறித்து பிரச்சினைகளை எழுப்புவதை விட அவ்வாறான யோசனை வரக் காரணம் என்ன என்ற கேள்விக்கு, பதிலைத் தேட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டை நேசிப்பவர்களாக பொருளாதார, அரசியல், ஜனநாயக ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்ப தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.
ஜாதி, மத, மொழி, இன பேதங்களை புறந்தள்ளி நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
(அத தெரண தமிழ்)
0 Comments