Ticker

6/recent/ticker-posts

ஆங்கிலத்தில் மட்டுமல்லாது தமிழிலும் வருடாந்த கணக்கை சமர்ப்பிக்குமாறு கேட்பது குற்றமாம்! கைரியா ஆசிரியையின் கண்மூடித்தனமான கருத்து!


// Though u all couldn'nt understand the budget report which was read in English and pursued it to be read in Tamil.//
- Charmaine Jennifer Godfrey

கடந்த வாரம் இடம்பெற்ற கைரியா பாடசாலையின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது வருடாந்த கணக்கு வழக்கு ஆங்கிலத்தில் மட்டுமே வாசிக்கப்பட்டது.

''அதனை தமிழிலும் வாசியுங்கள். நிறைய பெற்றோர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. மக்களை சென்றடைய வேண்டும் என்ற ஒரு செய்தியை ஏன் ஆங்கிலத்தில் மட்டும் வாசிக்கின்றீர்கள்'' என்ற ஒரு பெற்றாரின் வேண்டுகோளுக்கு கைரியா பாடசாலையில் கடமையாற்றும் ஒரு சிங்கள ஆசிரியையின் விளக்கம்தான் இங்கு மேலே பதிவிடப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியையின் கருத்துப்படி அப்படி கோரிக்கை விடுவது கூட பாடசாலைக்கு எதிரான செயற்பாடாகவே அர்த்தம் கற்பிக்கப்படும் நிலையை உருவாக்கியுள்ளது.
கைரியா என்பது உயர் மட்டக்குடிகளின் பாடசாலையல்ல. அது மத்திய கொழும்பின் அடித்தட்டு மக்களின் ஒரு பாடசாலையும் கூட.
இங்கு கற்பவர்கள் மத்திய கொழும்பில் வாழும் சாதாரண பெற்றோரின் பிள்ளைகள். இதில் சிலருக்கு தூய தமிழில் உரையாற்றினால் கூட புரிந்துகொள்ள முடியாமல் சங்கட நிலைமை ஏற்படுவதை புரியக் கூடியதாக இருக்கிறது.
ஆங்கில மொழியில் மட்டும் கூட்டத்தை நடாத்துவது பாடசாலைக்கு பெருமை என்ற கருத்தியலின் பின்னணியில் இருப்பது, ஒரு போலி கௌரவமும், ஒரு வரட்டு சிந்தனையுமாகும்.
அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம் புரியாத பெற்றோரை அந்தக் கூட்டத்திலிருந்து தனிமைப் படுத்தி ஒதுக்கும் ஒரு செயற் திட்டமாகும்.
ஒருவருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்த போதும் அவரின் தாய் மொழியில் ஒரு விடயத்தை அறிவது அவரின் அடிப்படை மனித உரிமையாகும்.
இந்த அடிப்படை உரிமையையே கைரியா அதிபர் அன்று மீறினார். அது மட்டுமல்லாமல் அப்படி தமிழில் வாசியுங்கள் என்று கோரிய பெற்றாரை கூட்டத்தில் மிகவும் மோசமாக விமர்சித்து பாடசாலையின் எதிரிகளாக சித்தரிக்கவும் முற்பட்டார்.
ஓர் அரசாங்க பாடசாலையில் அந்த உரிமை மீறப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழ் மொழிக்குள்ள உரிமை மீதான சட்டத்தையும்அண்மையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமை (Right to information) சட்டத்தையும் கேலி செய்வதாகவே இச்சம்பவம் உள்ளது.
இலங்கையில் தமிழுக்குக் கிடைத்திருக்கும் உரிமையை இலங்கை ஜனநாயக குடியரசு இந்நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கம் அடிப்படை மனித உரிமை என்பதை கூட அறியாமல் இந்த ஆசிரியை உளறியிருப்பதைப் பார்த்தால் கைரியாவின் போக்கை தீர்மானிப்பதில் இத்தகைய ஆசிரியைகளின் இனவாத கருத்தியல் இதன் பின்னணியில் இருக்கிறது என்ற சந்தேகம் ஊர்ஜிதமாகின்றது.

Post a Comment

0 Comments