காணாமல் போனவர்கள் சம்பந்தமான அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்கும் சட்டமூலம் இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டமைக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று பாராளுமன்றத்தில்நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பில் டுவிட்டரில் கருத்து வௌியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப், இலங்கையில் மிகவும் அர்த்தமுள்ள நல்லிணக்க செயற்பாட்டுக்கு, இது வரலாற்று வெற்றி என கூறியுள்ளார்.
இதற்கிடையில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலும் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.
உண்மை மற்றும் நல்லிணக்க செயல்முறையை சிறந்த ஆரம்பத்திற்கு காணப்பட்ட தடைக்கு அப்பால் சென்றுள்ள நடவடிக்கையாக இதைக் கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே நியாயம், மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சந்தர்ப்பத்தில் இலங்கை வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்துள்ளதாக கருத முடியும் என ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் டொம் மெலினோஸ்கி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

0 Comments