காஷ்மீர் வன்முறைக்கு பாகிஸ்தானின் மறைமுகத் தூண்டுதலே காரணம் என்று மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி வேதனை தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் தீவிரவாத தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 50 நாட்களாக தீவிரவாத ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அங்கு 50 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.இருப்பினும் தொடர்ந்து வன்முறை நடைப்பெற்று வருவதால், காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் என்று மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பல்வேறு நடவடிககிகளை மேற்கொள்ள ஆலோசித்து வருகிறது.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் காஷ்மீர் சென்று முதல்வர் மெஹபூபா முஃப்தியை சந்தித்து ஆலோசித்து வந்தார். அப்போது காஷ்மீர் இளைஞர்கள் இப்படி வன்முறையில் ஈடுபடுவதை விடுத்து, தங்களது வாழ்க்கை முறைகளை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இன்று மெஹபூபா முஃப்தி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மெஹபூபா முஃப்தி காஷ்மீர் வன்முறை குறித்து நரேந்திர மோடி மிகவும் கவலை தெரிவித்தார் என்று கூறினார். மேலும் கடந்த 2008ம் ஆண்டு முதல் காஷ்மீரில் அமைதி இல்லை என்றும், இதற்கு கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அலட்சியமே காரணம் என்றும் அவர் குற்றச்சாட்டது வைத்துள்ளார்.அப்போதைய அரசு காஷ்மீர் பிரச்னைக்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் மேலும்கூறினார்.
காஷ்மீரில் அமைதி நிலவ பாகிஸ்தான் அரசு விரும்புகிறதா இல்லையா என்பதை பளிச்சென்று தெரிவிக்க வேண்டும் என்றும், காஷ்மீரில் நடைப்பெற்று வரும் வன்முறைக்கு பாகிஸ்தான்தான் மறைமுகக் காரணம் என்றும் அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

0 Comments