Ticker

6/recent/ticker-posts

நண்பிகளின் வீடுகளில் பதுங்கும் நாமல்! விரட்டியடிக்கும் தாய்மார்கள்

கடந்த காலங்களில் மக்களுக்கு சேவை செய்வதாக கூறி நாடு முழுவதும் சிறப்பான நபராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுற்றி வந்தார். எனினும் தற்போது அவருக்கு மிகவும் மோசமான ஒரு காலப்பகுதியாக மாறியுள்ளது.
பல நிதி மோசடி குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள நாமல் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வழி தெரியாமல் தடுமாறி வருகிறார். இந்நிலையில் தனது நண்பிகள் பெயர்கள் கூறி குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முயன்று வருகிறார்.

நாமலின் நண்பிகள் ஒவ்வொருவராக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் கைது செய்யப்படும் நிலையில், குற்றச்சாட்டுகளில் இருந்து நாமல் தப்பித்துக் கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது.
தப்பித்துக் கொள்வதற்காக குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளுமாறு கூறுவதற்கும் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்து கொள்வதற்கு வழி தேடி நண்பிகளின் வீடுகளுக்கு நாமல் சென்றுள்ளார். இதன்போது நண்பிகளின் தாய்மார்களால் நாமல் விரட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது வரையில் நாமல் தனது நண்பியிடம் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுப்பதற்கான நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. tamilwin.com

Post a Comment

0 Comments