முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் நிஷாந்த விக்ரமசிங்க, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களின் பயண நேரத்தை தான் எண்ணியவாறு மாற்றியதாக கோப் குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பாக கோப் குழு மேற்கொண்ட விசாரணைகளில் முன்னாள் அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
தனிப்பட்ட தேவைகளுக்காக சில விமான பயண மார்க்கங்களும் மாற்றப்பட்டுள்ளதாக கோப் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனம் ஒன்றின் நேர அட்டவணைக்கு அமைய விமானங்களை பயணங்களை மேற்கொள்ளவது அத்தியவசியமானது என்ற போதிலும் நிஷாந்த விக்ரமசிங்க நேர அட்டவணையை தான் விரும்பியவாறு மாற்றியுள்ளார்.
2014ஆம் ஜனவரி மாதம் 22ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்று மலேசியாவில் கோலாலம்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளது.
319 என்ற இந்த விமானத்தை சிங்கப்பூர் நோக்கி திருப்பிய சம்பவமான ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் தலைவராக இருந்த நிஷாந்த விக்ரமசிங்கவின் தான்தோன்றித்தமான செயல்.
நிஷாந்த விக்ரமசிங்க நாட்டின் தேசிய தேவைக்காக இதனை செய்யவில்லை. மனைவி மற்றும் அன்றைய பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகமவை கொழும்பு அழைத்து வர விமானத்தை சிங்கப்பூர் நோக்கி திருப்பியுள்ளார்.
மேலும் நிஷாந்த விக்ரமசிங்க, விமான சேவையின் தூதுவராக தனக்கு நெருக்கமான சத்துரிகா என்ற பெண்ணை நியமித்திருந்தார்.
விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றிய சத்துரிகாவுக்கு நிஷாந்த விக்ரமசிங்க விசேட சலுகைகளை வழங்கியதுடன் தான் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்த பெண்ணையும் அழைத்துச் சென்றுள்ளார்.
நிறுவனத்தின் தூதுவர் என்பதால், கடமையை செய்ய சுதந்திரம் மற்றும் எவ்வித கட்டணங்களும் செலுத்தாமல் நாடுகளுக்கு விமான பயணங்களை மேற்கொள்ளும் சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாடு ஒன்றுக்கும் நிறுவனத்தின் தலைவரான நிஷாந்த விக்ரமசிங்க, இந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் நாட்டு மக்களின் பணத்தில் இந்த விமான பயணத்தை மேற்கொண்டதாக கோப் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அது மாத்திரமல்லாது இந்த விமானப் பணிப்பெண் 2014ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி ஜனாதிபதி பணிக்குழுவில் திட்ட இணைப்பாளராக இணைத்து கொள்ளப்பட்டு, சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது.
சத்துரிகா சேனாநாயக்க சமரநாயக்க என்ற இந்த பெண் ஸ்ரீலங்கன் நிறுவனத்தில் விசேட சம்பளத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன் ஜனாதிபதி செயலகத்திலும் சம்பளத்தை பெற்றுள்ளார்.
மேலும் இந்த பெண்ணுக்கு ஜனாதிபதி செயலகத்தில் எந்த விசேட பணிகளும் இருக்கவில்லை. நாமல் ராஜபக்சவின் தேவைகளையே இந்த பெண் நிறைவேற்றி வந்துள்ளார்.
நிஷாந்த விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அறிந்தே இந்த பணி நாமலுக்கு பணிவிடை செய்து வந்துள்ளார்.
இதற்கு ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மாத்திரமல்லாது ஜனாதிபதி முன்னாள் செயலாளரும் பொறுப்புக் கூறவேண்டும்.மேலும் நிஷாந்த விக்ரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் ஸ்ரீலங்கன் நிறுவனம் ஒரு வருடத்தில் 500 வீதம் நஷ்டத்தை எதிர்நோக்கியது.
2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 9 ஆயிரத்து 306 மில்லியன், 2009, 2010ஆம் ஆண்டுகளில் 2 ஆயிரத்து 698 மில்லியன், 2010, 2011ஆம் ஆண்டுகளில் 382 மில்லியன், 2011, 2012 ஆம் ஆண்டுகளில் 19 ஆயிரத்து 788 மில்லியன், 2012, 2013 ஆம் ஆண்டுகளில் 21 ஆயிரத்து 750 மில்லியன், 2013, 2014 ஆம் ஆண்டுகளில் 32 ஆயிரத்து 408 மில்லியன், 2014, 2015 ஆம் ஆண்டுகளில் 16 ஆயிரத்து 495 மில்லியன் என மொத்தமாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 816 மில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளது. tamilwin.com

0 Comments