Ticker

6/recent/ticker-posts

லக்ஷ்மன் கிரியெல்லவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக பீடத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டல் மற்றும் கட்டடத் திறப்பு விழா இன்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் இடம்பெறவிருந்தது.

பல்கலைக்கழக வளாகத்தில் அரசியல் வாதங்களைத் தவிர்க்குமாறும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாமை அகற்றக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உயர்கல்வி அமைச்சர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் நடைபெற்ற இரண்டு திறப்பு விழாக்களில் கலந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்திலும் மாணவர்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

Post a Comment

0 Comments